உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண் புழு உரம் தயாரித்தல் ஒரு நாள் பயிற்சி முகாம்

மண் புழு உரம் தயாரித்தல் ஒரு நாள் பயிற்சி முகாம்

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் கிராமத்தில், வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமையின், 'அட்மா' திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயா-ரித்தல் குறித்து ஒருநாள் பயிற்சி முகாம், வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமையில் நடந்தது.அவர், ''பள்ளிப்பாளையம் வட்டார விவசாயிகளுக்கு நெல் ஏ.டி.டி.,54, சோளம் சி.எஸ்.வி.,31, சான்று பெற்ற விதைகள் மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவைப்-படும் விவசாயிகள் ஆதார் அட்டை, பட்டா, சிட்டா நகல் எடுத்து வந்து இடுபொருட்களை பெற்றுக்கொண்டு, பணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, இயற்கை விவசாயி நல்லசிவம், மண் புழு உரம், மண்புழுக்களை தேர்வு செய்ய வேண்டிய குணாதிசயங்கள், இடம் உள்ளிட்டவை குறித்து பேசினார். வேளாண்மை அலு-வலர் மாயஜோதி, உதவி வேளாண்மை அலுவலர் நிஷா, வட்-டார தொழில்நுட்ப அலுவலர் கிருபா, உதவி தொழில்நுட்ப மேலாளர் அருண்குமார் உள்ளிட்டோர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை