உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம்

ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம்

நாமக்கல் : வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் நடந்தது.நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களில் சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்யப்படும். அந்த வகையில் நேற்று வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு காலை, 10:00 மணிக்கு வடை மாலை அணிவிக்கப்பட்டு தொடர்ந்து பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபி ேஷகம் நடந்தது. பின்னர், ஆஞ்சநேயருக்கு தங்கக்கவச அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ