உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஹாரன் அடித்ததால் டிரைவருக்கு குத்து

ஹாரன் அடித்ததால் டிரைவருக்கு குத்து

ஹாரன் அடித்ததால் டிரைவருக்கு குத்துஎருமப்பட்டி,:எருமப்பட்டி யூனியன், கோடாங்கிப்பட்டியை சேர்ந்தவர் பூபதி, 25; பால் ஆட்டோ டிரைவர். இவர், பொங்கல் பண்டிகையன்று பால் எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, கோடாங்கிப்பட்டியில் பொங்கல் கலைநிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது.சாலையில் செல்ல இடையூறாக இருந்ததால், ஒதுங்கி நிற்கும்படி பூபதி ஹாரன் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த பழனிவேல், 49, என்பவர், பூபதியின் முகத்தில் குத்துவிட்டுள்ளார்.காயமடைந்த பூபதி, எருமப்பட்டி போலீசில் புகாரளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனிசாமியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை