மேலும் செய்திகள்
ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
23-Jan-2025
கைதான ஆசிரியர் சஸ்பெண்ட்நாமக்கல்:நாமக்கல் அடுத்த பெருமாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் செல்வகுமார், 53; இவர், ஆங்கில பாடத்தில் சந்தேகம் எழுப்பிய, ஐந்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் ரீதியாக இரட்டை அர்த்தத்தில் பேசியுள்ளார்.இதுகுறித்து மாணவி, நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் செல்வகுமாரை, போக்சோ வழக்கில் கைது செய்தனர்.அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவுப்படி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பச்சமுத்து விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பித்தார். அதன்படி, ஆசிரியர் செல்வகுமாரை சஸ்பெண்ட் செய்து, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.
23-Jan-2025