உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீ விபத்தில் முதியவர் பலி

தீ விபத்தில் முதியவர் பலி

தீ விபத்தில் முதியவர் பலிப.வேலுார்:-நாமக்கல் மாவட்டம், நல்லுார் அருகே, ஆவாரங்காடு புதுாரை சேர்ந்தவர் ரங்கன், 80; கூலித்தொழிலாளி. இவரது மனைவி வீராயி, 70; இருவரும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை, சமையல் செய்வதற்காக வீட்டிற்கு வெளியே, விறகு அடுப்பை வீராயி பற்ற வைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தீப்பொறி பறந்து, குடிசை வீட்டின் மேல் விழுந்தது.இதனால் குடிசை வீடு மள, மளவென தீப்பிடித்து எரிந்தது. அப்போது வீட்டிற்குள் படுத்திருந்த ரங்கன், தீயில் சிக்கி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர், ரங்கனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, ரங்கன் உயிரிழந்தார். விபத்தில் குடிசை வீடு முற்றிலும் எரிந்து வீணானது. நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி