உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சமக்கல்விக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்

சமக்கல்விக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்

சமக்கல்விக்கு ஆதரவாகபா.ஜ., கையெழுத்து இயக்கம்குமாரபாளையம்:குமாரபாளையம் நகர, பா.ஜ., சார்பில், 'சமக்கல்வி எங்கள் உரிமை' என, மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து, கையெழுத்து இயக்கம் நகர தலைவி வாணி தலைமையில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சரவணராஜன், மாவட்ட மகளிர் அணி தலைவர் புவனேஸ்வரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அப்புசாமி, ஐயப்பன் மற்றும் குமாரபாளையம் நகர பா.ஜ., நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இன்னொரு மொழியை கற்க வழிவகை செய்ய சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் தங்களுடைய ஆதரவை கையெழுத்திட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை