உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரக்கிளை விழுந்துதந்தை, மகள் படுகாயம்

மரக்கிளை விழுந்துதந்தை, மகள் படுகாயம்

மரக்கிளை விழுந்துதந்தை, மகள் படுகாயம்ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 44; ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கவுண்டம்பாளையம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, டூவீலரில் மகள் பூஜாஸ்ரீ, 18, என்பவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அம்மன் நகர் பகுதி அருகே சாலையை கடப்பதற்காக, ஆலமரத்திற்கு அடியில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென மரத்தின் கிளை முறிந்து செந்தில்குமார் மற்றும் பூஜாஸ்ரீ மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ராசிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ