உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கலெக்டர் அலுவலக நுழைவாயில்சுவரின் மேற்பகுதி சேதம்

கலெக்டர் அலுவலக நுழைவாயில்சுவரின் மேற்பகுதி சேதம்

கலெக்டர் அலுவலக நுழைவாயில்சுவரின் மேற்பகுதி சேதம்கரூர்:கரூர் கலெக்டர் அலுவலக, நுழைவு வாயில் சுவரின் மேற்பகுதி சேதம் ஏற்பட்டுள்ளதை சீரமைக்க வேண்டும்.கரூர், தான்தோன்றிமலையில் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இங்கு, வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்கூட்டம், மாதம் ஒரு முறை விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டங்களில் கோரிக்கை மனு அளிக்க, பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு அலுவலகங்கள் செயல்படுவதால், வேலை நிமித்தமாக பொதுமக்கள், பணியாளர்கள் என ஏராளமானவர்கள் நாள்தோறும் வருகின்றனர்.பொதுமக்கள் மனு அளிக்க வரும்போது, கலெக்டர் அலுவலக வளாக நுழைவுவாயிலின் கீழ் பகுதியில் நிறுத்தி, சோதனை செய்த பின் அனுமதிக்கப்படுகின்றனர். கலெக்டர் அலுவலக நுழைவாயில் சுவரின் மேற்பகுதி சேமடைந்துள்ளது. இங்கிருந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து விழுந்து, விரிசல் காணப்படுகிறது.எனவே, நுழைவு வாயிலின் மேற்பகுதியில் விரிசல் காணப்படும் பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.******************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி