உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மின் கம்பத்தில் ஷாக்மின் ஊழியர் படுகாயம்

மின் கம்பத்தில் ஷாக்மின் ஊழியர் படுகாயம்

மின் கம்பத்தில் 'ஷாக்'மின் ஊழியர் படுகாயம்பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பகுதியை சேர்ந்தவர் துரை, 48; மின் ஊழியர். இவர், நேற்று மின்கம்பத்தில் ஏறி பணியாற்றி கொண்டிருந்தார். பணி முடிந்து இறங்கி கொண்டிருந்த போது, அருகில் செல்லும் மற்றொரு மின் ஒயரில் கை உரசியது. இதில், துரை மீது மின்சாரம் பாய்ந்து மேலேயே துடித்துக்கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு படுகாயமடைந்த துரையை மீட்டு கீழே கொண்டுவந்தனர். தொடர்ந்து, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி