மேலும் செய்திகள்
குளித்தலையில் 7 டூவீலர் பறிமுதல்
15-Mar-2025
உரிய ஆவணம் இல்லாதஇரண்டு பைக் பறிமுதல்குளித்தலை:சென்னை, வடபழனி, கிழக்கு நவச்சிவாயம்புரம் ஹரிஷ் குமார், 23. திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக், 19, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் யமஹா பைக்கில், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலை கீழக்குறப்பாளையம் பிரிவு ரோடு அருகே அதிவேகமாக வந்தனர்.அப்போது, குளித்தலை எஸ்.ஐ, சரவணன்கிரி பைக்கை நிறுத்தி விசாரித்த போது, வாகனத்தில் பதிவு எண் மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், சந்தேகத்திற்கு இடமாக பைக் உரிமையாளர் யார் என தெரியவில்லை என்பதால், பைக்கை பறிமுதல் செய்து, இருவர் மீதும் குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதேபோல் தொடர்ந்து பஜாஜ் பல்சர் பைக்கில் சென்னை, வடபழனி தமீம்அன்சாரி, 23, அவரது மனைவி பூமணி, 20, திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் காதலி சரண்யா, 19, ஆகிய மூவரும் வேகமாக வந்தனர். வாகனத்தில் பதிவு எண் மற்றும் ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பைக்கை பறிமுதல் செய்து, மூன்று பேர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
15-Mar-2025