கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் துவக்கம்
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் துவக்கம்நாமக்கல்,:தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டம் சார்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம், நேற்று துவங்கியது.நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், நாமக்கல் மாவட்ட கிளை அலுவலகம் உள்ளது. இங்கு, நீச்சல் பயிற்சி குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில், ஆண்டுதோறும் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் நடக்கிறது. இந்தாண்டு கோடைகால நீச்சல் பயிற்சி, நேற்று துவங்கியது. ஜூன், 8 வரை நடக்கிறது. 12 நாட்களுக்கான கட்டணம், 1,200 ரூபாய் மற்றும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து, 1,416 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகையை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். 12 நாட்கள் பயிற்சி முகாம், ஐந்து கட்டங்களாக நடக்கிறது. நேற்று தொடங்கி, வரும், 13 வரை, முதற்கட்டம்; ஏப்., 15 முதல் 27 வரை, இரண்டாவது கட்டம்; ஏப்., 29 முதல் மே, 11 வரை மூன்றாவது கட்டம்.மே, 13 முதல், 25 வரை, நான்காவது கட்டம்; மே, 27 முதல் ஜூன், 8 வரை, ஐந்தாவது கட்டம் என, நீச்சல் பயிற்சி கற்றுத்தரப்படுகிறது. அதேபோல், தினமும் காலை, 6:00 முதல், 7:00; 7:00 முதல், 8:00; 8:00 முதல், 9:00; மாலை, 4:00 முதல் 5:00; 5:00 முதல், 6:00 மணி வரை நீச்சல் கற்றுக்கொடுக்கப்படும். விபரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை, 7401703492 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். நீச்சல் தெரிந்தவர்கள், காலை, 9:00 முதல், மாலை, 5:00 வரை, ஒரு மணி நேரத்திற்கு, ஒருவருக்கு, 59 ரூபாய் செலுத்தி பயன்பெறலாம்.