உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிராம பூசாரிகள், பூக்கட்டுவோர்பேரவை நிர்வாகிகள் ஆலோசனை

கிராம பூசாரிகள், பூக்கட்டுவோர்பேரவை நிர்வாகிகள் ஆலோசனை

கிராம பூசாரிகள், பூக்கட்டுவோர்பேரவை நிர்வாகிகள் ஆலோசனைமோகனுார்:மோகனுார் சுப்பிரமணியபுரம் குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் வளாகத்தில், தமிழ்நாடு விஸ்வ ஹிந்த் பரிஷத் சார்பில், கிராம பூசாரிகள் பேரவை, பூக்கட்டுவோர் பேரவை ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வி.ஹெச்.பி., தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். மண்டல அமைப்பாளர் சின்ன குமரவேல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, கிராம பூசாரிகள் நலவாரியம் மற்றும் பூக்கட்டுவோர் பேரவையின் பயன்பாடுகள் குறித்து விளக்கினார்.தொடர்ந்து, நாமக்கல் மாவட்ட பொதுக்குழு நடத்துவது, பூக்கட்டுவோர் சுய உதவிக்குழு அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. பூக்கட்டுவோர் குழுவிற்கு ஒருங்கிணைப்பாளராக அன்னலட்சுமி, கிராம பூசாரிகள் பேரவையின் மோகனுார் ஒன்றிய ஒருங்கிணைப்பாளராக மனோகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்.ஆடிட்டர் ராஜா, உதவித்தொகை பெறுவது பற்றியும், மகளிர் சுய உதவிக்குழு ஒற்றுமையாக இணைந்து வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் விதம் குறித்தும் பேசினார். பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.**********************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை