மேலும் செய்திகள்
நத்தம் ரோட்டில் எரிந்த டூவீலர்
21-Mar-2025
சாலையில் எரிந்த டூவீலர்: ராசிபுரத்தில் பரபரப்புராசிபுரம்:ராசிபுரம் பகுதியில், சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலர் வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த், 40. இவர் தனது உறவினரிடம் இருந்து, ஸ்கூட்டி பெப் என்ற டூவீலரை வாங்கி கொண்டு, ஆண்டகலுார் கேட் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர், நேற்று மதியம் மீண்டும் ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். கவுண்டம்பாளையம் முனியப்பன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது, டூவீலரில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த ஆனந்த், உடனடியாக வாகனத்தை சாலையோரமாக நிறுத்துவதற்குள் தீப்பற்றிக் கொண்டு எரிய தொடங்கியது. டூவீலரை சாலையிலேயே போட்டு விட்டு, ராசிபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள், 15 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் டூவீலர் முற்றிலும் எரிந்து எலும்புக் கூடானது. வாகனத்தில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு, அதன் மூலம் தீ பிடித்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இது குறித்து, ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21-Mar-2025