உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மனைவியாக வாழ்ந்தவர் பிரிந்ததால் ஓட்டுனர் தீக்குளிப்பு

மனைவியாக வாழ்ந்தவர் பிரிந்ததால் ஓட்டுனர் தீக்குளிப்பு

குமாரபாளையம் :குமாரபாளையத்தில், மனைவியாக வாழ்ந்து வந்தவர் பிரிந்ததால், ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நாராயணா நகரில் வசிப்பவர் முனிராஜ், 36, ஆட்டோ ஓட்டுனர். இவர், வேறொருவர் மனைவியுடன் வசித்து வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வந்ததால், இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் இவரை விட்டு மனைவியாக வாழ்ந்து வந்த நபர் பிரிந்து சென்றார்.பலமுறை சேர்ந்து வாழ அழைத்தும் வரவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த முனிராஜ் நேற்று காலை, 9:30 மணியளவில், வீட்டின் முன் மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள், தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். குமாரபாளையம் போலீசார், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !