பாச்சலில் உள்ள தனியார் கல்லுாரியில்மார்ச் 1ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
பாச்சலில் உள்ள தனியார் கல்லுாரியில்மார்ச் 1ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்ராசிபுரம்:'பாச்சலில் உள்ள தனியார் கல்லுாரியில், வரும் மார்ச், 1ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது' என, மாவட்ட கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்ட நிர்வாகம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து பாச்சல் ஞானமணி தொழில்நுட்ப கல்லுாரியில், வரும் மார்ச், 1ல், காலை, 9:00 மணி முதல், 3:00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 5-ம் வகுப்பு முதல், 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறலாம்.முகாமில், 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன.வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விபரம், உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளவும். மேலும், வேலையளிப்போரும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள, 04286-222260 அல்லது, 9843740575 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.