உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி174 ஞ்., செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி174 ஞ்., செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி174 ஞ்., செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்நாமக்கல்:ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 174 கிராம பஞ்., செயலாளர்கள், தற்செயல் விடுப்பு எடுத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், மூன்று கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக, தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்; இரண்டாம் கட்டமாக, வரும் ஏப்., 4ல், சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்தில், பெருந்திரள் முறையீடு, மூன்றாம் கட்டமாக, ஏப்., 21ல், சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, நேற்று முதல்கட்டமாக, மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுவேல், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், 'முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் பஞ்., செயலாளர்களை, தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை, பஞ்., செயலாளர்களுக்கு விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும்' என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேல், இணை செயலாளர் பச்சமுத்து, மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.மாவட்டத்தில், 310 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. அவற்றில், 31 காலிப்பணியிடம் உள்ளது. அதில், 174 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி