உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்பு

கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்பு

கிணற்றில் விழுந்து இறந்த2 புள்ளி மான்கள் மீட்புராசிபுரம்:ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்து, தேசிய நெடுஞ்சாலை, ஏ.டி.சி., டிப்போ அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில், வழி தவறி வந்த இரண்டு புள்ளிமான்கள் விழுந்து கிடப்பதாக, ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, கிணற்றில் விழுந்த, இரண்டு மான்களும் இறந்து கிடப்பது தெரியவந்தது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், இரண்டு மான்களையும் வெளியே எடுத்து வந்தனர். பின், வனத்துறை மூலம், நாமக்கல்லுக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை