மேலும் செய்திகள்
துாங்கிய கர்ப்பிணியிடம்2 பவுன் நகை பறிப்பு
15-Mar-2025
சேந்தமங்கலம் அருகே பட்டப்பகலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்புசேந்தமங்கலம், சேந்தமங்கலம் அருகே, கொண்டமநாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் மலர்கொடி, 55; இவர், நேற்று தன் டூவீலரில் நாமக்கல் சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது, பின்னால் டூவீலரில், 'ஹெல்மெட்' அணிந்து வந்த, இரண்டு மர்ம நபர்கள், மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த, ஐந்து பவுன் நகையை பறித்துக்கொண்டு, கொண்டமநாய்க்கன்பட்டி வழியாக மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர். அவர்களை பின்தொடர்ந்து துரத்திச்சென்ற மலர்கொடி, பாதி வழியில் பரிதவித்து நின்றார்.பின், இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசில் புகாரளித்தார். போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த நகை திருடர்களின் வண்டி எண்ணை வைத்து, வலைவீசி தேடி வருகின்றனர்.பட்டப்பகலில் பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15-Mar-2025