உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிலை கடத்தலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற மிரட்டி கையெழுத்து: நாமக்கல் எஸ்.பி.,யிடம் பூசாரி கதறல்

சிலை கடத்தலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற மிரட்டி கையெழுத்து: நாமக்கல் எஸ்.பி.,யிடம் பூசாரி கதறல்

நாமக்கல்: 'சிலை கடத்தலில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற, என்னை மிரட்டி உண்மைக்கு புறம்பாக கையெழுத்து பெற்ற நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வடவத்துாரை சேர்ந்த பெரி-யசாமி, 60, நாமக்கல் எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்டம், மோகனுார், வடவத்துாரில் உள்ள தலை-மலை வெங்கடாஜலபதி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு மேல் பூஜை செய்து வருகிறேன். இந்த கோவிலில், விளக்கு நாச்சியார் என்றழைக்கப்பட்ட ஐம்-பொன்னாலான சிலை இருந்தது. இந்த சிலை காணாமல் போனது. இதையடுத்து, கோவில் குடிப்பாட்டுக்காரரான, எருமப்-பட்டியை சேர்ந்த செல்வகுமார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகாரளித்தார். அதன்படி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்னிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, 'செல்வகுமார் கூறும் பழமையான சிலை இருந்தது உண்மைதான்; தற்போது இருக்கும் சிலை போலியானது' என, நான் வாக்குமூலம் கொடுத்தேன். இதற்கிடையே, ஒரு சிலர், 'நீங்கள் தொடர்ந்து கோவிலில் வேலை செய்ய வேண்டும் என்றால், இந்த கடிதத்தில் கையெழுத்து போட்டு விடுங்கள்' என மிரட்டி, அவர்கள் தயாரித்து இருந்த கடிதத்தில் என் கையெ-ழுத்தை பெற்றுக்கொண்டனர். மேலும், இந்த உண்மை சம்ப-வத்தை புகாராக தங்களிடம் தெரிவிப்பதால், என் உயிருக்கும், உடமைக்கும், பணிக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.மேலும், சிலை கடத்தலில் ஈடுபட்டவர்களை காப்பாற்றும் நோக்கத்தில் என்னை மிரட்டி உண்மைக்கு புறம்பாக கையெ-ழுத்து பெற்ற நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ