| ADDED : ஜூலை 07, 2024 01:05 AM
நாமகிரிப்பேட்டை : நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்., 18 வார்டுகளில், 30,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். டவுன் பஞ்., நுாலகம் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட் விரி-வாக்கத்தின் போது, அந்த நுாலகம் இடிக்கப்பட்டது. சீராப்பள்ளி எல்லையில் உள்ள தனியார் கட்டடத்தில், நுாலகம் இயங்கி வரு-கிறது. அங்கு போதுமான இடவசதி இல்லாததால், புதிய புத்த-கங்களை வாங்குவதும் இல்லை. சரியான பாதுகாப்பு இல்லா-ததால் பழைய புத்தகங்களை முறையாக அடுக்கி வைக்கவும் சிரமம் ஏற்படுகிறது.எனவே, நாமகிரிப்பேட்டை நகர் பகுதியில் நுாலகத்திற்கு இடம் ஒதுக்கி கட்டடம் கட்ட வேண்டும் என, பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரியாக்கவுண்டம்-பட்டி செல்லும் நாமக்கல் சாலையோரம் நுாலகம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு நுாலகம் கட்ட போது-மான இடம் உள்ளதா என, டவுன் பஞ்., ஊழியர்கள், வருவாய்து-றையினர் சேர்ந்து அளவிடும் பணியில், நேற்று ஈடுபட்டனர்.அரியாகவுண்டம்பட்டி செல்லும் சாலையில் போதுமான இடம் இருந்தால், அதே பகுதியில் நுாலகம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அப்படி இல்லை என்றால் வேறு பகுதியில் இடம் தேர்வு செய்யப்படும் என, டவுன் பஞ்., அலுவலர்கள் தெரிவித்தனர்.