உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டுமனை விற்பனை தொடக்க விழா

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டுமனை விற்பனை தொடக்க விழா

திருச்செங்கோடு: சேலம் ஸ்ரீலேண்ட் மார்க் நிறுவனத்தின் அங்கமான, திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் நகர் வீட்டு மனைகள் விற்பனை தொடக்க விழா, செங்கோடம்பாளையத்தில் நடந்தது. ஸ்ரீலேண்ட் மார்க் நிறுவன தலைவர் அங்கமுத்து தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆண்டாள் பக்தர்கள் பேரவையின் நிறுவனர் ஆண்டாள் சொக்கலிங்கம், நகரின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினார். ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், ராஜு, ஓய்வு பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியம், ஜெய்சக்தி குரூப் கம்பெனிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில் வடிவேலன், திருப்பூர் டெக்னோ ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அசோக்குமார் ஆகியோர் பேசினர். விழாவில், மனை முன்பதிவு செய்த, 55 பேருக்கு கிரைய ஆவணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, சேலம் பரதம் 360 டிகிரி பரதநாட்டிய குழுவின் குரு, செல்வி பிரியதர்சினி தலைமையில், 22 சிறுமியரின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. கே.எஸ்.ஆர்., ஆசைத்தம்பி, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் இளங்கோவன், இன்ஜினியர் ஜெயபிரகாஷ், ஓய்வு போலீஸ் எஸ்.ஐ., குப்புசாமி, ஓய்வு பொது பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன், சேலம் ஜீவா பப்ளிக் பள்ளி இயக்குனர் பத்ம நாபன், ஸ்ரீலேண்ட் மார்க் நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். எல்.ஐ.சி., மணிவண்ணன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ