| ADDED : ஜன 24, 2024 12:24 PM
நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை வகித்தார். அதில், நுாறு நாள் வேலை எனக்கூறி, 50 முதல், 60 நாள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். நுாறு நாள் வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும், வேலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி பாக்கியை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. இ.கம்யூ., மாவட்ட செயலாளர் அன்புமணி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.