கள்ளவழி கருப்பனார்முப்பூஜை திருவிழா
கள்ளவழி கருப்பனார்முப்பூஜை திருவிழாநாமகிரிப்பேட்டை, : நாமகிரிப்பேட்டை அடுத்த ஆர்.புதுப்பட்டியில் பிரசித்தி பெற்ற கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. இங்கு தை மாதம், 4வது வாரம் ஞாயிற்றுக்கிழமை முப்பூஜை விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு பிப்., 9ல் முப்பூஜை விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிடும் பக்தர்கள், அனைவருக்கும் விருந்து வைப்பது வழக்கம். 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடுவர். இந்த விழா மதியம், 12:00 மணிக்கு தொடங்கும். இரவு முழுவதும் விருந்து நடத்தப்படும்.