உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விழுந்த கட்டட மேஸ்திரி பலி

விழுந்த கட்டட மேஸ்திரி பலி

விழுந்த கட்டட மேஸ்திரி பலிசேந்தமங்கலம்:சேந்தமங்கலம் அருகே, பச்சுடையாம்பட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை, 55; கட்டட மேஸ்திரி. இவர், மது போதையில் மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் கருத்துவேறுபாடு காரணமாக, மனைவி, எருமப்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்று போதையில் இருந்த அண்ணாமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே தள்ளாடியபடி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அருகில் இருந்த சாக்கடையில் தடுமாறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து, சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ