மேலும் செய்திகள்
வருவாய்த்துறை அலுவலர்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
19-Feb-2025
வருவாய் துறையினர் போராட்டம்ராசிபுரம்:ஆர்.ஐ.,யை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து வருவாய்துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திருச்செங்கோடு பகுதியில், பணியில் இருந்த ஆர்.ஐ.,யை தனிநபர் ஒருவர் தாக்கியுள்ளார். இதை கண்டித்து, தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ராசிபுரம் தாசில்தார் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சசிகுமார் வரவேற்றார். செயலாளர் விஜயன், நிர்வாகி தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வருவாய் ஆய்வாளரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பணியின்போது போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
19-Feb-2025