இன்று வேணுகோபால்சுவாமி திருக்கல்யாணம்
இன்று வேணுகோபால்சுவாமி திருக்கல்யாணம்நாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டையில், வரலாற்று சிறப்பு மிக்க வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ருக்மணி சத்யபாபா சமேத வேணுகோபால் சுவாமி மற்றும் காசி விஸ்வநாதர் கோவில்கள் உள்ளன. வேணுகோபால் சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசியில் திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா, இன்று யாக சாலையுடன் தொடங்குகிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், மாலை, 6:30 மணிக்கு குதிரை வாகனத்தில் பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது. 12 காலை, 9:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு வருகை தருகிறார். மாலை, 3:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுவாமி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.