வெண்ணந்துார் நகரகாங்கிரஸ் கூட்டம்
வெண்ணந்துார்:வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், நேற்று நடந்தது. நகர தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தமிழக மாணவர்கள் நலன் கருதி, மத்திய அரசு மும்மொழி கொள்கையை கைவிட வேண்டும். வெண்ணந்துார் பகுதி மக்கள் நலன் கருதி, நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு, நகர பஸ் நேரடியாக இயக்க வேண்டும். சிறு, குறு தொழிலாளர்கள் நலன் கருதி, டவுன் பஞ்., பகுதியில் இருந்து, 100 நாள் வேலை திட்டத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவதை அரசு கைவிட வேண்டும். விசைத்தறியாளர்களின் நலன் கருதி, ஜவுளி ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், ஜவுளி தொழிலுக்கு ஜி.எஸ்.டி., வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். வெண்ணந்துார் டவுன் பஞ்., பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் விலை கொடுத்து வாங்கிய வீட்டுமனை நிலத்திற்கு பட்டா வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.