உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தி.கோட்டில் சமூக வளைகாப்பு

தி.கோட்டில் சமூக வளைகாப்பு

தி.கோட்டில் சமூக வளைகாப்புதிருச்செங்கோடு:திருச்செங்கோடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட, திருச்செங்கோடு நகரம், திருச்செங்கோடு ஒன்றியம், மல்லசமுத்திரம் ஒன்றியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த, 350 பெண்களுக்கு சமூக வளைகாப்பு விழா, தனியார் மண்டபத்தில் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், கர்ப்பிணிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், கடலை மிட்டாய், உலர் பழங்கள், புடவை, மாலை அடங்கிய பரிசு பெட்டகங்களை வழங்கினார். எம்.எல்.ஏ., ஈஸ்வரன், மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, சேர்மன் நளினிசுரேஷ்பாபு, நகர்மன்ற துணை தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, ஐந்து வகை கலவை சாதம் வழங்கப்பட்டது.மாவட்ட சமூக நல அலுவலர் காயத்ரி, மாவட்ட சமூக உரிமை திட்ட அலுவலர் மகாலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சசிகலா, திட்ட அலுவலர்கள் மோகனா, வித்யாலட்சுமி, வள்ளிநாயகி ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி