சட்ட கல்லுாரி தற்காலிகஆசிரியர் தற்கொலை
சட்ட கல்லுாரி தற்காலிகஆசிரியர் தற்கொலைராசிபுரம்:ராசிபுரம் அடுத்த வி.நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி மகன் அருணாச்சலம், 35; இவருக்கு திருமணமாகி, 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. அருணாசலம், நாமக்கல் சட்ட கல்லுாரியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு, 'ஆன்லைன் ரம்மி' விளையாடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால், நண்பர்கள், உறவினர்களிடம் லட்சக்கணக்கான தொகையை கடன் வாங்கி, ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனால், சில நாட்களாக அருணாச்சலம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு, 9:00 மணிக்கு வீட்டிற்கு வந்த அருணாச்சலம், அறையை தாழிட்டுக்கொண்டு துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.