உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஓய்வூதிய தொகையைஉயர்த்தி வழங்க கோரிக்கை

ஓய்வூதிய தொகையைஉயர்த்தி வழங்க கோரிக்கை

ஓய்வூதிய தொகையைஉயர்த்தி வழங்க கோரிக்கைபள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியில், அகில இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தின், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நிறுவன தலைவர் பழனி தலைமையில், நேற்று நடந்தது. கூட்டத்தில், தொழிலாளர்களின் ஓய்வூதிய தொகை, 1,200 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். பதிவு பெற்ற தொழிலாளர் இறந்தால், இயற்கை மரண நிதி உயர்த்தி வழங்க வேண்டும். தொழிலாளர் நல வங்கி துவங்க அரசிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானமங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு கட்டுமான நல வாரியம் உறுப்பினர் கணேசன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, நாமக்கல் மாவட்ட செயலாளர் அந்தோணி ஜெனிட் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை