மேலும் செய்திகள்
மனவளக்கலை வகுப்பில் பங்கேற்க அழைப்பு
21-Mar-2025
சட்டக்கல்லுாரி மாணவருக்குகாயகல்ப, மனவளக்கலை பயிற்சிநாமக்கல்:நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், அறிவுத்திருக்கோவிலில், அரசு சட்டக்கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, 'காயகல்ப' மற்றும் 'மனவளக்கலை' பயிற்சி முகாம், நேற்று நடந்தது. நாமக்கல், சேலம் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலரும், மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலருமான உதயகுமார் தலைமை வகித்தார். சட்டக்கல்லுாரி பேராசிரியர் பிரியா முன்னிலை வகித்தார்.அறக்கட்டளை உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத்தலைவர் உழவன் தங்கவேலு, பயிற்சி அளித்தார். காயகல்ப பயிற்சியின் மூலம், உடல் நலம், மன நலம் பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும். அறிவு மேலோங்கி, மெய்ப்பொருள் விளக்கம் பெறலாம். தினமும் ஏழு நிமிடங்கள் மட்டும் பயிற்சி செய்து உடல் நலம் காக்கலாம் என விளக்கினார்.முகாமில், சட்டக்கல்லுாரி பேராசிரியர் ஜீவா, இந்துமதி, ரமேஷ், அஞ்சனா, கல்லுாரி மாணவ, மாணவியர், மனவளக்கலை மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
21-Mar-2025