உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய ரேஷன் கடைதிறக்க கோரிக்கை

புதிய ரேஷன் கடைதிறக்க கோரிக்கை

புதிய ரேஷன் கடைதிறக்க கோரிக்கைவெண்ணந்துார்:வெண்ணந்துார் யூனியன், அத்தனுார் டவுன் பஞ்., சமத்துவபுரத்தில் புதிதாக ரேஷன் கடை கட்ட, முன்னாள் எம்.பி., சின்ராஜ், 2023 - 24ம் நிதியாண்டில், 14.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது. கட்டுமான பணி முடிந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகிறது. எனவே, அத்தனுார் டவுன் பஞ்., சமத்துவபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி