தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கைராசிபுரம்:ராசிபுரம் நகராட்சி, 26வது வார்டு கோனேரிப்பட்டியில் இருந்து மேட்டுக்காடு கிராமத்திற்கு செல்ல தனியார் ஹோமியோபதி கல்லுாரி வழியாக சாலை வசதி உள்ளது. இந்த சாலையைத்தான் கல்லுாரி மாணவர்கள், கிராம மக்கள், விவசாயிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். முக்கியமாக, விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருட்களை இவ்வழியாக கொண்டு செல்கின்றனர். ஆனால், கடந்த, 10 ஆண்டுகளாக இந்த சாலை மண் சாலையாகவே உள்ளது.ஆங்காங்கே, குண்டும், குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் இந்த சாலை வழியாக செல்ல கடும் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை தவிர்த்தால், 5 கிலோ மீட்டர் துாரம் சுற்றிச்செல்ல வேண்டும். எனவே இந்த சாலையை, தார்ச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.