மேலும் செய்திகள்
மகாவீர் ஜெயந்தி தினம் நாளை மது விற்க தடை
09-Apr-2025
இன்று டாஸ்மாக் கடைக்கு லீவுநாமக்கல்:நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: இன்று, மகாவீர் ஜெயந்தியையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், உரிம வளாகங்களை மூட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இன்று மகாவீர் ஜெயந்தியொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும்.இந்த உத்தரவை மீறி, மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
09-Apr-2025