மேலும் செய்திகள்
விசைத்தறியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது
21-Apr-2025
செய்திகள் சில வரிகளில்...
02-May-2025
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, காவிரி பஸ் ஸ்டாப்பில் நினைவு துாண் உள்ளது. இந்த நினைவு துணை, நெடுஞ்சாலைத்துறையினர் சில நாட்களுக்கு முன் இடித்து அகற்றினர். இதை கண்டித்து, நேற்று காலை, காவிரி பஸ் ஸ்டாப் பகுதியில், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதுகுறித்து, மாவட்ட தலைவர் அசோகன் கூறுகையில், ''கடந்த, 2012ல் பள்ளிப்பாளையம் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வுரிமை கோரிக்கை மாநாட்டில், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, காவிரி பகுதியில், சி.ஐ.டி.யு.,வின் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு சின்னத்தை, எந்த ஒரு அறிவிப்பும் இன்றி, கடந்த, 17ல் நெடுஞ்சாலைத்துறை இடித்து அகற்றியது. இதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது,'' என்றார். துணை செயலாளர் குமார், செயலாளர் முத்துக்குமார் மறறும் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
21-Apr-2025
02-May-2025