மேலும் செய்திகள்
நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
13-Jun-2025
நாமக்கல், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட கிளை சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பிரபு வரவேற்றார். மாநில பொருளாளர் செல்வராசன், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் அடிப்படை ஊதியத்தில், 20 சதவீதம் ஊதியம் பிடித்தம் செய்யப்படுவதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் பாரதி, தேவகி உள்பட பலர் பங்கேற்றனர்.
13-Jun-2025