டிட்டோஜாக் சார்பில் ஒரு நாள் ஸ்டிரைக் மாவட்டத்தில் 1,000 ஆசிரியர்கள் பங்கேற்பு
நாமக்கல்: கோரிக்கைகளை வலியுறுத்தி, 'டிட்டோஜாக்' சார்பில், நாமக்கல் மாவட்டத்தில் நடந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில், 1,000 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட-வடிக்கைக்குழு -(டிட்டோஜாக்) சார்பில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நாமக்கல்லில் நடந்தது. இடை-நிலை, தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை விலக்கி, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்.தொடக்கக்கல்வி துறையை சீரழிக்கும், பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கும், மாநில பணிமூப்பு அரசாணையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சியின்றி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி பணி மூப்பின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட, 31 அம்ச கோரிக்கைகளை வலியு-றுத்தி, இந்த ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம், நேற்று மேற்-கொள்ளப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில், கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர்கள் பழனியப்பன், சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். உயர்மட்டக்குழு உறுப்பினர் கலைச்-செல்வன் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி-ரியர் மன்ற மாநில பொருளாளர் முருக செல்வராசன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர். நாமக்கல் மாவட்டம் முழு-வதும், தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 2,800 ஆசிரியர்கள் உள்-ளனர். அதில், நேற்று நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில், 1,000 பேர் பங்கேற்றனர்.