உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வர் பிறந்த நாள் விழா115 இடங்களில் நலத்திட்டம்

முதல்வர் பிறந்த நாள் விழா115 இடங்களில் நலத்திட்டம்

முதல்வர் பிறந்த நாள் விழா115 இடங்களில் நலத்திட்டம்நாமக்கல்:நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., வெளியிட்ட அறிக்கை:தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, இன்று நாமக்கல் மாநகராட்சியில், ராமாபுரம்புதுார் காலனியில், பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் உணவு வழங்கும் நிகழ்ச்சியும், நடராஜபுரம், என். கொசவம்பட்டி அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு இனிப்பு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இரவு உணவு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. அதேபோல், நாமக்கல், மோகனுார், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, கொல்லிமலை, ராசிபுரம், வெண்ணந்துார், நாமகிரிப்பேட்டை, மோகனுார் ஒன்றிய பகுதிகளிலும், சேந்தமங்கலம், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, சீராப்பள்ளி, நாமகிரிப்பேட்டை, வெண்ணந்துார், அத்தனுார், பட்டணம், பிள்ளாநல்லுார் டவுன் பஞ்., பகுதிகள் என, மொத்தம், 115 இடங்களில், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.**************


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ