உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் குறைதீர் கூட்டம்: 705 மனுக்கள் குவிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம்: 705 மனுக்கள் குவிப்பு

மக்கள் குறைதீர் கூட்டம்: 705 மனுக்கள் குவிப்புநாமக்கல்:நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 705 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக் கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், விடுதியில் தங்கி பயிலும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, கலை திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு, தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பதக்கம், கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.முன்னதாக, கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6.83 லட்சம் ரூபாய் மதிப்பில், பேட்டரி வாகனத்தை கலெக்டர் உமா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தனித்துணை கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., சுகந்தி, பஞ்., உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை