உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் வேகமாக சென்றதால்மோதல்; 8 பேர் மீது வழக்கு

டூவீலரில் வேகமாக சென்றதால்மோதல்; 8 பேர் மீது வழக்கு

டூவீலரில் வேகமாக சென்றதால்மோதல்; 8 பேர் மீது வழக்குசேந்தமங்கலம்:சேந்தமங்கலத்தில், டூவீலரில் சென்ற போது ஏற்பட்ட தகராறில், 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன், 17, பிரேம்குமார், 17. இருவரும் ஜங்கலாபுரத்தில் டூவீலரில் வேகமாக சென்றதாக தெரிகிறது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த ரேகாராணி, 43, என்பவர், எதற்கு இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ