மேலும் செய்திகள்
நின்ற லாரி மீது டூவீலர் மோதி மெக்கானிக் பலி
22-Aug-2024
குமாரபாளையம்: ஈரோடு, பெருந்துறையை சேர்ந்தவர் மணிமாலா, 40; சமையல் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை, 10:10 மணிக்கு, சங்ககிரியில் சமையல் வேலை செய்து முடித்து விட்டு, தன்னுடன் பணியாற்றும் சஞ்சய், 40, என்பவருடன், 'டி.வி.எஸ்., ஜூபிடர்' டூவீலரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தனர். குமாரபாளையம் அருகே, சேலம் - கோவை புறவழிச்சாலை, எதிர்மேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பள்ளி வாகனம் டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பள்ளி டிரைவர், சங்ககிரியை சேர்ந்த ஜோதிவேல், 55, என்பவரை கைது செய்தனர்.
22-Aug-2024