மேலும் செய்திகள்
அரிவாளை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
07-Aug-2024
ப.வேலுார்: பரமத்தி அருகே, கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் காரைக்கால் பிரிவு சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் சுங்ககாரம்பட்டியை சேர்ந்த குணசேகரன், 53. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக, பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. தகவல்படி, பரமத்தி போலீஸ் எஸ்.ஐ., சரண்யா மற்றும் போலீசார், பரமத்தி அருகே காரைக்கால் பிரிவு சாலையில் உள்ள குணசேகரன் மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, விற்பனை செய்த மளிகை கடை உரிமையாளர் குணசேகரனை பரமத்தி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
07-Aug-2024