நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் சாலை ஆக்கிரமிப்பால் அவதி
நாமக்கல்: நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. இங்கு மப்சல், டவுன், மினி பஸ்கள் நிறுத்துவதற்கென தனித்தனி வளாகங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டவுன் பஸ்கள் நிற்கும் பகுதி யில் காய்கறி கடைகள் வைத்துள்ள சிறு வியாபாரிகள், சாலையை ஆக்கிரமித்துள்ளதுடன், நிழலுக்காக தார்ப்பாய் கொண்டு சாலையின் இருபுறமும் பந்தல் கட்டியுள்ளனர். இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்படைகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.