மேலும் செய்திகள்
நத்தம் கோயிலில் பூக்குழி கண் திறப்பு
15-Mar-2025
மாரியம்மனுக்குபுது கரன்சிநோட்டில் அலங்காரம்ராசிபுரம்:ராசிபுரம் அடுத்த, கோனேரிப்பட்டி வடமாரியம்மனுக்கு, 10 லட்சம் ரூபாய் புதுக்கரன்சியால் ஆன அலங்காரம் செய்யப்பட்டது. ராசிபுரம் அடுத்த கோனேரிப்பட்டி பகுதியில், வடமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபி ேஷகம் எட்டு நாட்களுக்கு முன் நடந்தது. தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து, பின் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அம்மனுக்கு, 10 லட்சம் ரூபாய் புதுக்கரன்சி நோட்டில் அலங்காரம் செய்திருந்தனர். இதனால், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
15-Mar-2025