உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர்கள் மோதிஒருவர் உயிரிழப்பு

டூவீலர்கள் மோதிஒருவர் உயிரிழப்பு

டூவீலர்கள் மோதிஒருவர் உயிரிழப்புசேந்தமங்கலம்:கொல்லிமலை அடிவாரம், நடுக்கோம்பையை சேர்ந்தவர் பிரபாகரன், 32; இவர், நேற்று முன்தினம் மாலை, காரவள்ளியில் இருந்து நடுக்கோம்பைக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கருவாட்டாறு பாலம் அருகே எதிரே வந்த மற்றொரு டூவீலர், இவர் மீது மோதியது. தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு டூவீலரும் மோதியது. இந்த விபத்தில், பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற டூவீலர்களில் வந்த வெங்கடேசன், விஜி ஆகி‍யோர் லேசான காயமடைந்தனர். பலத்த காயமடைந்த பிரபாகரன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். சேந்தமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ