உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேனீ விவசாயிகளுக்கு களப்பயிற்சி

தேனீ விவசாயிகளுக்கு களப்பயிற்சி

தேனீ விவசாயிகளுக்கு களப்பயிற்சிநாமகிரிப்பேட்டை:நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி, மலையாம்பட்டி கிராமத்தில், திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம் சார்பில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தேனீ பெட்டி மூலம் தேனீ வளர்ப்பது, பாதுகாக்கும் முறை, தேனை எடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 10 நாள் நடந்த இந்த பயிற்சி முகாமில், 40 விவசாயிகளுக்கு, தலா, 10 தேனீ பெட்டி, பெட்டி வைப்பதற்கான ஸ்டேண்ட் உள்ளிட்ட, 28,000 ரூபாய் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டன. மொத்தம், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டன.வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகள், அதற்கான சான்றிதழை வழங்கினால் முழுவதும் இலவசமாக உபகரணங்கள் வழங்கப்பட்டன. இல்லை என்றால், 2,500 ரூபாய் மதிப்புள்ள பெட்டி மானிய விலையில், 1,350 ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பெட்டி பெற்ற விவசாயிகள், எந்த இடத்தில் பெட்டியை வைக்க வேண்டும் என்பது குறித்து களப்பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை, கதர் - கிராம தொழில்கள் ஆணையத்தின், மாநில துணை இயக்குனர் வாசிராஜன், விவசாயிகளின் பண்ணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு மாநில துணைத்தலைவர் லோகேந்திரன், நிர்வாகிகள் ஜெய்சங்கர், கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ