மாரியம்மன் கோவில்திருவிழா கோலாகலம்
மாரியம்மன் கோவில்திருவிழா கோலாகலம்எலச்சிபாளையம்: .எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற செல்லியம்மன், மாரியம்மன் கோவிலில், கடந்த, 18ல், கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, பக்தர்கள் பொங்கல் வைத்தனர். 12:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்தனர். மதியம், 2:00 மணிக்கு, கம்பம் ஊர் கிணற்றில் விட்டனர்.மாலை, 4:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இரவு, 6:00 மணிக்கு, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.திருவிழாவை முன்னிட்டு, தினமும் இரவு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, ஊர்பொது மக்கள், கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.