மேலும் செய்திகள்
ப.வேலுாரில் தேங்காய் விலை சரிவு
30-Apr-2025
ப.வேலுார், ப.வேலுாரில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு, செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடக்கிறது. இங்கு, உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி வெளிமாவட்ட வியாபாரிகளும் வருகின்றனர். கடந்த வாரம் நடந்த ஏலத்தில், அதிகபட்சம் தேங்காய் கிலோ, 53.53 ரூபாய், குறைந்தபட்சம், 36.71 ரூபாய், சராசரி, 51.51 ரூபாய் என, இரண்டு லட்சத்து, 51,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 52.10 ரூபாய், குறைந்தபட்சம், 30.19 ரூபாய், சராசரி, 48.47 ரூபாய் என, 17,880 தேங்காய்கள், இரண்டு லட்சத்து, 82,000 ரூபாய்க்கு விற்பனையானது.
30-Apr-2025