உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

நாமக்கல், நாமக்கல் மாவட்ட ஜாக்டோ--ஜியோ கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், காணொலியில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சங்கம், பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள் மாநில முடிவின் படி, நாளை (அக்., 16) 'கோரிக்கை அட்டை' அணிந்து பணியாற்ற வேண்டும்.அன்று மாலை, 5:00 மணிக்கு, 10 அம்ச கோரிக்கையை அரசு விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, ப.வேலுாரில் காமராஜர் சிலை அருகிலும், திருச்செங்கோடு, ராசிபுரத்தில், பி.டி.ஓ., அலுவலகம் முன்பும், நாமக்கல் பூங்கா சாலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.------------------------------------------------ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அங்கமுத்து, முருகேசன், வீராசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை