மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், ஊதிய உயர்வு வழங்கக்கோரி, நாமக்கல்லில் தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். அடிப்படை பதவிகளுக்குரிய காலியிடங்களை நிரப்ப வேண்டும். மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர்கள், பகுதி நேர பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். கணக்கீட்டு ஆய்வாளர் பதவி உயர்வு விரைவாக வழங்க வேண்டும், 6 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.